உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம்  கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு தப்பாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, நெட்டப்பாக்கம் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கி, மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பஞ்.,  ஊழியர்கள் பாஞ்சாலன், ஜெயச்சந்திரன் ராஜா, பிரபாகரன், பாரதி, இந்துமதி உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு தப்பாட்டம் இசைக்கலைஞர்கள் பங்கேற்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்