உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் போலீஸ் அறிவிப்பு

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் போலீஸ் அறிவிப்பு

புதுச்சேரி : சைபர் கிரைம் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.சைபர் கிரைம் போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரியில் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் சைபர் கிரைம் மோசடியில், ரூ. 64 கோடி மேல் பணம் இழப்பு நடந்துள்ளது. 3,500க்கும் மேற்பட்ட புகார்கள், 900 சமூக வலைத் தளம் மூலம் ஆர்டர் செய்து பொருள் வாங்கிய புகார்களும், 350க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான புகார்கள் பதிவாகி உள்ளது.இதனால் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு மற்றும் இணைய வழி மூலம் பாதுகாப்பு, இணைய வழியில் என்னென்ன வகையில் மோசடிகள் நடக்கிறது என்பதை உங்கள் இடத்திற்கே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அரசு, தனியார் நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த நிர்வாகம் விரும்பினால், சைபர் கிரைம் போலீஸின் 7639483862 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ