உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குற்றங்களை தடுக்க போலீசார் சோதனை 

குற்றங்களை தடுக்க போலீசார் சோதனை 

புதுச்சேரி: புதுச்சேரி நகரப் பகுதியில் பைக் திருட்டு, நடந்து செல்லும் பெண்களிடம் மொபைல் போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் நேற்றிரவு தற்காலிக பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்து, ஆவணங்களை பரிசோதித்தனர்.அதில், சந்தேகப்படும்படி இருந்த நபர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை