உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

 பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

அரியாங்குப்பம்: தங்கை வீட்டில் தங்கியிருந்த சகோதரி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லித்தோப்பு, பெரியார் நகரை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி விக்டோரியா, 64. இவர், கணவரை பிரிந்து தனியாக வசித்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், அரியாங்குப்பம் சண்முகா நகரில் உள்ள தனது தங்கை ஜலமேரி வீட்டில் தங்கிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற நிலையில், அவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து விக்டோரியா இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை