சிறுவன் மாயம் போலீஸ் விசாரணை
பாகூர் : மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவிலை சேர்ந்தவர் அய்யனார்; பெயிண் டர். இவரது மகன் ஜீவிதரன், 14; அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். ஜீவிதரன் நேற்று முன்தினம் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி வீட்டிற்கு சென்றார். அவரை, பெற்றோர் கண்டித்து, இதுபோல் முடி வெட்டி கொள்ளாமா என கேட்டு, அவருக்கு மொட்டை போட்டனர். இதனால், மனமுடைந்த ஜீவிதரன் இரவு 8:30 மணியளவில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற் றோர்கள், மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அய்யனார் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தா ல், 0413- 2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.