ஓட்டலில் தகராறு செய்த கும்பலுக்கு போலீஸ் வலை
புதுச்சேரி: புதுச்சேரி அண்ணாலை சாலையில் உள்ள ஓட்டலுக்குநேற்று முன்தினம் நள்ளிரவில்,4 பேர் கொண்ட கும்பல் வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ஓட்டலுக்கு,உணவு வாங்க வந்த ஒருவர், அந்த நபர்களை தட்டி கேட்டார்.அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, அந்த கும்பல், ஓட்டலில், இருந்த சமையல், கரண்டியால், சரமாரியாக அந்த நபரை தாக்கினர்.பின்னர் அந்த கும்பல், கடலுார் மாவட்ட பதிவு எண் கொண்ட காரில், அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து, அந்த கும்பல் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.