உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெக்கானிக்கை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை

மெக்கானிக்கை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: மெக்கானிக்கை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 26; ரெட்டியார்பாளையத்தில் டுவீலர் ஓர்க் ஷாப் வைத்துள்ளார். இவர், கடந்த 2ம் தேதி இரவு 11:00 மணியளவில் கடையை மூடினார். அப்போது அங்கு வந்த புதுநகரை சேர்ந்த பிரகாஷ், 35, என்பவர் தனது பைக்கை சரி செய்து கொடுக்கும்படி சக்திவேலுவிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த பிரகாஷ், சக்திவேலை ஆபாசமாக திட்டி, கல்லால் தலையில் தாக்கி, கொலை மி ரட்டல் விடுத்தார். சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து பிரகாஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை