உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரவுடி வீடுகளில் போலீசார் சோதனை

ரவுடி வீடுகளில் போலீசார் சோதனை

அரியாங்குப்பம்; அரியாங்குப்பத்தில், ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தீபாவளி பண்டிகையொட்டி, குற்றங்களை தடுக்கும் வகையில், போலீஸ் உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் ரவுடிகளின் வீடுகளில், போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக, அரியாங்குப்பம் பகுதியில் உள்ளி, அரியாங்குப்பம், ஆர்.கே., நகர், மணவெளி, சண்முகா நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட இடங்களில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அதில், ஆயுதங்கள், வேறு ஏதாவது, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என போலீசார் விசாரித்தனர்.மேலும், முக்கிய ரவுடிகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுறுத்தினர். போலீசாரின் சோதனை அரியாங்குப்பம் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை