மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
காரைக்கால் : காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஓ.என்.ஜி.சி., காவேரி அசட் மற்றும் பல்கலைக்குழு மானிக்குழு சார்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று துவங்கியது. மதுரை சமூக அறிவியல் நிறுவன தலைவர் ராஜா கருத்தரங்கை துவக்கி வைத்து நோக்கவுரையாற்றினார்.கருத்தரங்கில் சமூக விளிம்பில் உள்ளர்களை மேல்நிலைக்குக் கொண்டு வருதல், சமூக மதிப்பு, வாழ்க்கை தரம், பொருளாதார நிலை கல்வித்தரத்தில் அவர்களின் நிலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது. ஓ.என்.ஜி.சி. மேலாளர் வாசுதேவன் கருத்தரங்கு மலரை வெளியிட்டார். அண்ணா கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமை தாங்கினார்.பெங்களூர் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் துறை பேராசிரியர் சேகர் நோக்கவுரையாற்றினார். காரைக்கால் திட்டத்துறை இணை இயக்குநர் மோகன் வாழ்த்தி பேசினார்.கருத்தரங்கில் பல்வேறு மாநில பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் இன்றும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி சமூகபணித்துறை தலைவர் பாண்டி, பேராசிரியர்கள் சிவக்குமார், லட்சுமணபதி, பீட்டர் ஆண்டனி ஆகியோர் செய்திருந்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago