உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பத்தில் 10 ஏக்கரில் கயிறு உற்பத்தி செய்ய திட்டம்

அரியாங்குப்பத்தில் 10 ஏக்கரில் கயிறு உற்பத்தி செய்ய திட்டம்

புதுச்சேரி:'கயிறு உற்பத்திக்காக அரியாங்குப்பத்தில் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் மிகப் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது' என, தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் வல்லவன் பேசினார்.மாவட்டத் தொழில் மையத்தில் நேற்று நடந்த பயிலரங்கில் அவர் பேசியதாவது: பவர் டூல்ஸ் மூலம் தரமான விற்பனை பொருட்களை விரைவாக உருவாக்கம் செய்யலாம். 'பர்னிச்சர்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் 'அறைகலன்' என்பதாகும். 50 ஆண்டுகளாக தொழில் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் மக்கள் எளிமையான விலை மலிவான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர். 90களுக்கு முன் விலை மலிவான மற்றும் தரமான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர். இன்றைய கால கட்டத்தில் போட்டிகள் அதிகமாக உள்ளன. தரமான உற்பத்திப் பொருட்கள் விலை கூடியதாக இருந்தாலும் அதனை வாங்கும் எண்ணத்திற்கு மக்கள் வந்து விட்டனர். எதற்காகவும் வரிசையில் நிற்க மக்கள் விரும்புவதில்லை.உற்பத்திப் பொருட்களை கையால் செய்யும்போது காலதாமதம் ஏற்படும். உபகரணங்களைக் கொண்டு செய்வதன் மூலம் விரைவாக செய்ய முடியும். அதே நேரத்தில் தரமாகவும் செய்ய முடியும். கயிறு உற்பத்திக்காக அரியாங்குப்பத்தில் 10 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் மிகப் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த மரம் மற்றும் இரும்பு அறைகலன்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் தனியாக முதலீடு செய்வது கடினம். ஆனால் கிளஸ்டர் டெவலப்மெண்ட் மூலம் பெரிய அளவில் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். 1997க்குப் பின் தொழில் கொள்கையை மறுபரிசீலனை செய்யவில்லை.இதில் 'கிளஸ்டர் டெவலப்மெண்டிற்காக' 75 சதவிகிதம் மத்திய அரசு நிதி வழங்குகிறது. 25 சதவிகிதம் சம்பந்தப்பட்டவர்கள் நிதி வழங்க வேண்டும். இந்த 25 சதவிகிதத்தில் 10 சதவிகிதம் மாநில அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம் தொழில் உயரவும், விற்பனை அதிகரிக்கவும், தொழிலாளர்களின் நிலை உயரவும் வாய்ப்பு உண்டாகும். இவ்வாறு வல்லவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்