உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு உதவித்தொகை வழங்கல்

அரசு உதவித்தொகை வழங்கல்

புதுச்சேரி:நெல்லித்தோப்பு தொகுதியில் திருமண உதவித் தொகை மற்றும் ஒரு பெண் குழந்தை படிப்பிற்கான உதவித் தொகையை, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வழங்கினார்.நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் திருமண உதவித் தொகை மற்றும் ஒரு பெண் குழந்தை படிப்பிற்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 17 பேருக்கு மேற்கண்ட உதவித் தொகைக்கான காசோலைகளை ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில் துறை இயக்குனர் மோகன்தாஸ், துணை இயக்குனர் விஜயலட்சுமி, தொகுதி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ