உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உருவாக்க வேண்டும் : வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்கம் கோரிக்கை

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உருவாக்க வேண்டும் : வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்கம் கோரிக்கை

புதுச்சேரி : வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு அளித்து, வன்னியர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை உருவாக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியிடம் அளித்துள்ள மனு: புதுச்சேரியில் எம்.பி.சி., இனத்தவருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு இருந்தது. கடந்த ஆட்சியில், எம்.பி.சி., பிரிவிலிருந்த மீனவர்களை மிக மிக பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்து, அதன் அடிப்படையில் மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடாக 2 சதவீதம் நடைமுறையில் உள்ளது. எம்.பி.சி., இட ஒதுக்கீட்டின் பலனை வன்னியர்கள் மட்டுமே அபகரித்துக் கொள்வதாக, இப்பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினர் தவறாகக் கருதுகின்றனர்.அனைத்து சாதியினருக்கும் சமூக நீதிப்படி வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், வன்னியர் போன்ற பெரும்பான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளித்துவிட்டு, குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களுக்குத் தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு செய்வதே சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட சமூக நீதியாகும். எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் உத்திரவாதம் தரும் தனி இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளது. ஆனால், புதுச்சேரியில் இதுவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கப்படவில்லை. தற்போதுள்ள சட்ட வரையறைகளைக் கொண்டே வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு, வன்னியர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆகியவற்றை புதுச்சேரி அரசு உருவாக்க முடியும் என்பதால், பின்தங்கிய மக்களின் நலன் காக்க, மேற்கூறியவற்றை உருவாக்கித் தர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை