உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை

முதலீட்டாளர் பணம், நகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., கோரிக்கை

புதுச்சேரி : தனியார் நிதி நிறுவன முதலீட்டாளர்களின், பணம் மற்றும் நகைகள் திரும்ப கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தி.மு.க., துணை அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பி.என்.எல்., நிதி நிறுவன முதலீட்டாளர்கள் 15 ஆயிரம் பேர் 70 கோடி ரூபாய் மற்றும் வைசியாள் வீதியில் இயங்கி வந்த திருமலை பெனிபிட் பண்ட் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் 170 பேர் 4 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனங்களில் பலரின் நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நடுத்தர குடும்பத்தினர், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், சிறு சேமிப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன. இவற்றில் முதலீடு செய்து ஏமாந்தவர்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இந்த நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு, பொது மக்களின் முதலீடுகளை விட அதிகமாகும். கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இவர்களிடம் இருந்து பணம் பெற முடியாது. எனவே முதல்வர் நடவடிக்கை எடுத்து, முதலீட்டாளர்களின் முதலீடுகளையும், அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ