உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற பயிலரங்கம்

ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற பயிலரங்கம்

புதுச்சேரி:ஒருங்கிணைந்த கிராம முன்னேற்றம் குறித்த பயிலரங்கத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.சாரத்தில் உள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் கருத்தரங்க அறையில் நடந்த விழாவில் துறை இயக்குனர் கனகசபை வரவேற்றார். திட்டத் துறை செயலர் ராஜிவ் யதுவன்ஷி, பயிலரங்கத்தைத் துவக்கி வைத்தார்.ஐதராபாத்தில் உள்ள தேசிய கிராம மேம்பாட்டு நிறுவனத்தின் பஞ்சாயத்து ராஜ் மைய பேராசிரியர் சாருமதி சிறப்புரையாற்றினார். வரும் 23 ம்தேதி வரை நடக்கும் இந்த பயிலரங்கில், வேளாண் துறை, கால்நடை துறை, கூட்டுறவு, மீன்வளம், உள் ளாட்சி, பொதுப்பணித்துறைகள் எதிர்நோக்கும் சவால்கள், அவற்றை எதிர்கொண்டு திட்டங்கள் இயற்றுவது, அதனைச் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் திட்ட துணை இயக்குனர் அசோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி