உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்

ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்குஇறுதிகட்ட பயிற்சி முகாம்

புதுச்சேரி:இந்திரா நகர் சட்டசபை இடைத் தேர்தல் ஓட்டுச் சாவடி தலைமை அதிகாரிகள் மற்றும் உதவி தலைமை அதிகாரிகளுக்கான இறுதிகட்ட பயிற்சி முகாம் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்தது.முகாமில் தேர்தல் நடத்தும் அதிகாரி மலர்க்கண்ணன், பொதுப் பார்வையாளர் முகமது மஹ்தாப் உதீன் அகமது, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜனர்த்தனன், ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தனர்.பயிற்சியில் ஓட்டுச் சாவடி தலைமை அதிகாரியின் பணிகள், பொறுப்புகள், ஓட்டுப் பதிவு இயந்திரம் செயல்படுத்தும் முறை, ஓட்டுப் பதிவு துவங்குவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள். அழியாத மை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஓட்டளிப்பின் ரகசியம் குறித்த எச்சரிக்கைகள், ஓட்டுச்சாவடி உள்ளே அனுமதிக்க வேண்டிய நபர்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்