மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
15-Jan-2025
புதுச்சேரி: கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களின் கலாசார குழு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ணபாக்கா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். துணை முதல்வர் அய்யப்பன் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கல்லுாரி கலாசார குழு தலைவர் ரமேஷ் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
15-Jan-2025