மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் ஆன்கோஹீல் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவிசங்கர், புற்றுநோய் கதிர்வீச்சு மற்றும் மருந்தியல் சிகிச்சை டாக்டர் பாண்டியன் பாஸ்கர் ராவ் ஆகியோர், புற்றுநோய் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.முதன்மை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரவிசங்கர் கூறியதாவது;புற்றுநோய் வருவதற்கு சிகரெட், மதுபானம், வாய் புகையிலை சம்பந்தமான பொருட்கள் பயன்படுத்துதல், வைரஸ் கிருமிகள், உணவு முறை மாற்றம், குடும்பத்தினருக்கு புற்றுநோய் காரணங்களால் இந்நோய் வருகிறது.புற்றுநோய் அறிகுறிகளான வலி, கட்டிகள், உணவு குறைவாக உண்ணுதல் , தீராத காயங்கள், எடை குறைவு, மச்சங்களின் மாற்றம் என பல அறிகுறிகளை சரியான நேரத்தில் நாம் கண்டுபிடித்தால் ஆரம்பத்திலேயே நோயை கண்டு பிடிக்க ஏதுவாக இருக்கும். இதுதவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல், அதிக காரமான உணவுகளை உண்ணுதல், இறைச்சி வகைகள் உண்ணுதல், உணவுகளை அதிக சூடாக உண்ணும்போதும், காய்கறி, பழங்களை குறைவாக உணவுகளில் சேர்த்து கொள்ளும் காரணங்களால் இந்த நோய் வருகிறது.இந் நோய்க்கு தடுப்பூசி மூலம் 70 முதல் 90 சதவீதம் வரை நோயை குணமாக்கும் நிலை தற்போதைய மருத்துவ முறையில் ஏற்பட்டுள்ளது. ஆன்கோஹீல் புற்றுநோய் சிகிச்சை மையத்தில், மார்பக, கர்ப்பபை வாய் புற்றுநோய், இரைப்பை மற்றும் உணவு குழாய், தைராய்டு மற்றும் நுரையீரல், சீறுநீரக உறுப்பு, எலும்பு, தசை, தோல் புற்றுநோய், கல்லீரல், குடல், ஆசனவாய் புற்றுநோய், ரத்தம், நெறிக்கட்டி, மூளை புற்றுநோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனையும், புற்றுநோய்க்கான முன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. என கூறினார்.விழுப்புரம், கடலுாரிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. சிகிச்சை பெற விரும்புவோர், 7695971116 என்ற மொபைல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago