உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு நவரை முன்பருவ பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு நவரை முன்பருவ பயிற்சி முகாம்

திருக்கனுார்: திருக்கனுார் உழவர் உதவியகம் சார்பில் நவரை நெல் சாகுபடி முன்பருவத்திற்கான செயல் விளக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.முகாமிற்கு, வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலைய உழவியல் நிபுணர் ரவி, பாரம்பரிய நெல் ரகங்களில் முக்கியத்துவம், நவீன தொழில்நுட்பம் குறித்து எடுத்துரைத்தார்.விவசாய பணிகளில் ட்ரோன் பயன்பாடுகள் குறித்து இளங்கோவனும், நெற்பயிரில் பூச்சி மேலாண்மை குறித்து பூச்சியியல் நிபுணர் விஜயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.இதில், உதவி வேளாண் அலுவலர்கள் திருமுருகன், கண்ணாயிரம், வட்டார மேலாளர் ஜெயந்திரன், காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ