கடற்கரை சாலையில் முன்னோட்ட யோகா திருவிழா
புதுச்சேரி : சர்வதேச யோகா தின விழா வரும் ஜுன் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.அதனையொட்டி, முன் னோட்ட யோகா திருவிழா மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது.யோகா திருவிழாவை ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் துவக்கி வைத்தார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கி, யோகாசன கூட்டு பயிற்சியில் பங்கேற்றார்.விழாவில், முதல்வர் ரங்கசாமி, சுபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., தலைமைச் செயலர் சரத் சவுகான், சுகாதாரத்துறைச் செயலர் ஜெயந்த குமார் ரே, அரசு செயலர்கள், ஆயுஷ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் காசிநாத் சமகண்டி, புதுச்சேரி ஆயுஷ் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், பல்வேறு வித யோகாசன செய்முறை விளக்கப்பட்டது.
முகக்கவசம் கட்டாயம் இல்லை
விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது;கொரோனா தடுப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. கொரோனா பரவலை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.