உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிலெப்ட் சாலை சீரமைப்பு

பிரிலெப்ட் சாலை சீரமைப்பு

புதுச்சேரி : தினமலர் செய்தி எதிரொலியால், ராஜிவ் சிக்னல் பிரிலெப்ட் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களை மூடி தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.புதுச்சேரி, நுாறடி சாலை ராஜிவ் சிக்னலில், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வழுதாவூர் நோக்கி வரும் வாகனங்கள் செல்லும் அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் பாதையில் மெகா சைஸ் பள்ளம், பாதாள சாக்கடை மேன்ஹோல், வெட்டப்பட்ட மரத்தின் அடிபாகம் உயரமாக இருப்பதால் அடிக்கடி அங்கு விபத்து ஏற்பட்டு வந்தது.பைக்கில் சென்ற போலீஸ்காரர் பள்ளத்தில் நிலைதடுமாறி பேரிகார்டில் மோதி உயிரிழந்தார். பள்ளத்தை மூடி தார் சாலை அமைக்க கடந்த 11ம் தேதி தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவினர் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக அக்கார்டு ஓட்டல் பிரிலெப்ட் சாலையில் உள்ள பள்ளம் மற்றும் சாய்ந்திருந்த மரத்தின் அடிபாகத்தை வெட்டி அகற்றி தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை