உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலை.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி பல்கலை.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதுச்சேரி பல்கலைக்கழக்தில் மூன்று நாள் ஜி-20 நுாலக உச்சி மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை நடத்தும் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி-20 நுாலக உச்சி மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தகங்கள் மனிதகுலத்தின் சிறந்த நண்பர்களாக கருதப்படுகின்றன. அவை தத்துவம், மொழி, இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான கல்வி ஆழத்தை ஆராய்வதற்கும் நமது அறிவார்ந்த ஆற்றலை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.மாறிவரும் காலத்திற்கேற்ப, நமது நுாலகங்கள், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாசகர்களின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.ஜி-20 நுாலக உச்சிமாநாடு பல்வேறு நாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது அனைவருக்கும் ஒரு வளமான அனுபவமாக இருக்கும். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், நுாலகர்கள் மற்றும் கள வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நுாலக மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை