உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு இன்றைக்குள் முன்னுரிமை

நீட் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு இன்றைக்குள் முன்னுரிமை

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ள சென்டாக், இன்றைக்குள் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு செய்த, சென்டாக், அடுத்து நீட் அல்லாத படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதை தொடர்ந்து மாணவர்கள் இன்று (19ம் தேதி) மாலை 4:00 மணிக்குள் தங்களுடைய லாகின் மூலம் உள்ளே நுழைந்து கல்லுாரி, பாடபிரிவுகளை முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. இந்த முன்னுரிமை கொடுக்காத மாணவர்களுக்கு முதற்கட்ட கணினி கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட மாட்டாது என்றும் சென்டாக் எச்சரித்துள்ளது. பி.டெக்,. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட கலை, அறிவியல், வணிக படிப்புகள், கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., தோட்டக்கலை, அக்ரி, பி.பார்ம், பார்ம்.டி., பி.பி.டி., ஐந்தாண்டு சட்டப்படிப்பு, உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் கல்லுாரி வாரியாக நிரப்பப்பட உள்ள இடங்களை www.centacpuducherry.inஎன்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0413-2655570 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை