உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருபுவனை : திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலைப் பொறியாளர்கள் மனோகரன், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கிளாடின்கிரேஸ்மக்பர்லன் வரவேற்றார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் விழாவிற்கு தலைமையேற்று ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள் சுரேஷ், சைமன், முரளிதரன், வினோதினி, ஹாசாலி, கோமதி, சசி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை