உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருபுவனை: திருபுவனை தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கி வருகின்றார். அதன்படி கடந்த 2024-2025ம் கல்வியாண்டில் தொகுதிக்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா மதகடிப்பட்டில் உள்ள திருபுவனை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமைதாங்கி மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி, பாராட்டினார். விழாவில் எம்.எல்.ஏ., பேசுகையில் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவ - மாணவிகள் நீட் தேர்வில் சாதிப்பதற்கு தேவையான புத்தகங்கள், கையேடுகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். படித்தால் மட்டுமே இவ்வுலகில் எந்த உயரத்தையும் உங்களால் எட்டிப் பிடிக்க முடியும். கிராமப்புற மாண வர்கள் கல்வி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை