உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி : ஊசுடு தொகுதியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.புதுச்சேரி காங்., கமிட்டி சார்பில், ஊசுடு தொகுதியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாபு, வட்டாரத் தலைவர் சங்கர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., செயலாளர் உதயகுமார் வரவேற்றார். விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது. இதில், காங்., நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை