உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொடர் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மின்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மணவெளி தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் அறிவிக்கப்படாமல் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல அரியாங்குப்பம் பகுதியில் அடிக்கடி மின்நிறுத்தம் செய்யப்படுவதால், பொதுமக்கள் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் மின்வெட்டு கண்டித்தை நோணாங்குப்பம் பொதுமக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு அரியாங்குப்பம் மின்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, அரியாங்குப்பம் மின்துறை உதவிப்பொறியாரிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை