உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதிய தொழிலாளர் சட்டத்தை கைவிட கோரி போராட்டம்: சி.ஐ.டி.யூ., எச்சரிக்கை

 புதிய தொழிலாளர் சட்டத்தை கைவிட கோரி போராட்டம்: சி.ஐ.டி.யூ., எச்சரிக்கை

புதுச்சேரி: புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரி, வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என, சி.ஐ.டி.யூ., எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநில குழு பொதுச் செயலாளர் சீனுவாசன் அறிக்கை; தொழிலாளர்களின் நீண்ட கால போராட்டங்களால் உருவாக்கப்பட்ட 29 தொழிலாளர் நலச் சட்டங்களை, மத்திய பா.ஜ., அரசு, நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கி, லோக்சபாவில் முறையான விவாதமின்றி நிறை வேற்றியது. கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் புதிய சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த மாட்டோம் என, அறிவித்துள்ளன. தமிழகத்திலும் அமல்படுத்தப்படவில்லை. புதுச்சேரியில் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என, ஏற்கனவே அனைத்து தொழிற்சங்கங்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையில் இது குறித்து எந்த விவாதமும் நடத்தாமல், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு, அவசர அவசரமாக நான்கு சட்டத் தொகுப்புகளையும் அமல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசின், தொழிலாளர் விரோதப் போக்கை சி.ஐ.டி.யூ., கண்டிக்கிறது. புதிய சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரியும், அனைத்துத் தொழிற்சங்கங்களுடனும் கலந்து ஆலோசித்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ