உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி மறியல் போராட்டம்

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி மறியல் போராட்டம்

புதுச்சேரி : விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க கோரி உயிரிழந்தவரின் உறவினர்கள்மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கோட்டக்குப்பம் ஹாஜிலத்திப் தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில், 43; ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் ஊழியர். கடந்த 29ம் தேதி அதிகாலை 2:20 மணிக்கு பணிகளை முடித்து கொண்டு நேரு வீதியில் கடற்கரை நோக்கி தனது பைக்கில் இஸ்மாயில் சென்றார்.அப்போது காந்தி வீதியில் முத்தியால்பேட்டையில் இருந்து சின்ன மணிக்கூண்டு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார், பைக் மீது மோதியது.இதில் இஸ்மாயில் துாக்கி வீசப்பட்டார். கார் சிறிது துாரம் சென்று நின்றது. பின் விபத்தில் சிக்கிய இஸ்மாயிலை மீட்காமல் அந்த கார் அதிவேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.விபத்து ஏற்படுத்திய கார் பதிவு எண்ணை கண்டுபிடிக்க முடியாததால், அடையாளம் தெரியாத வாகனம் என கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இஸ்மாயில் நேற்று முன்தினம் இறந்தார்.விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்காததால், இஸ்மாயில் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். நேற்று காலை 9:45 மணிக்கு, இஸ்மாயில் உறவினர்கள் மற்றும் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா தியேட்டர் சிக்னலில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ