உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுமி படுகொலையை கண்டித்து மகிளா காங்., உண்ணாவிரதம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

சிறுமி படுகொலையை கண்டித்து மகிளா காங்., உண்ணாவிரதம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

புதுச்சேரி, : புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து, மகிளா காங்., சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த சம்பவத்திற்கு பின்புலமாக போதைப்பொருட்கள் உள்ளதால், போராட்டங்கள், தீவிரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில், புதுச்சேரி மகிளா காங்., சார்பில்,ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இதற்கு, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி தலைமை தாங்கினார். இதில்முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்று பேசினர்.இந்த போராட்டத்தில், காங்., நிர்வாகிகள் மற்றும்ஏராளமான பெண்கள், வாயில் கருப்பு துணி கட்டி கலந்து கொண்டனர். இதில், சிறுமி படுகொலைக்கு பொறுப்பேற்று, முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி