மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கல்
புதுச்சேரி: தேங்காய்த்திட்டு, ராமகிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில், ராமகிருஷ்ணனின் 118வது பிறந்தநாளையொட்டி, பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை மற்றும் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கந்தசாமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பாரி வரவேற்றார். காங்கேயன் முன்னிலை வகித்தார். முன்னாள் சபாநாயகர் சபாபதி, பங்கேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். முன்னாள் வாரிய சேர்மன் பாஸ்கரன், சமூக சேவகர் குமாரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சம்பத் ஏற்புரை வழங்கினார். பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர் சித்ரா, சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.