மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கல்
04-Oct-2024
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு வி.பி.ஆர் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.புதுச்சேரி மிஷன் வீதி- செட்டி தெரு சந்திப்பில் உள்ள தனியார் சமுதாய கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட குருசுகுப்பம், வாழைகுளம், சின்னையாபுரம், மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு, ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொகுதி பா.ஜ., தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சின்னையாபுரம் முனியாண்டி, தொகுதி பொறுப்பாளர் அனந்த கண்ணன், குருசுப்பம் மூர்த்தி, வாழைகுளம் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
04-Oct-2024