உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கல்

அரசு பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கல்

புதுச்சேரி: கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுத்தி கரிப்புகுடிநீர் இயந்திரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வழங்கினார். ராஜ்பவன் தொகுதியில் அமைந்துள்ள கல்வே காலேஜ் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வேண்டு மென வக்கீல் குமரனிடம் தெரிவித்தனர். அதையடுத்து அவரின்முயற்சியால் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் மூலம் சுத்திகரிப்பு இயந்திரம் பள்ளிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி காஸ்மாஸ் தலைவர் பிரபாகரன், செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !