உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு கையேடு டிரைவர்களுக்கு வழங்கல்

விழிப்புணர்வு கையேடு டிரைவர்களுக்கு வழங்கல்

புதுச்சேரி : சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்பது, படுகாயமடைவது மற்றும் வாகனங்கள் சேதமடைவது ஆகியவற்றை குறைப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 35வது சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 15ம் தேதியன்று துவங்கியது. வரும் பிப்ரவரி 14ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, வாகன ஓட்டுனர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி மரப்பாலம், இந்திரா சதுக்கம், பாரதி மில் அருகில் ஆகிய இடங்களில் நேற்று நடந்தது.போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சீத்தாராம ராஜூ, அங்காளன், கலியபெருமாள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை