கோவில் திருப்பணிக்கு ரூ.15 லட்சம் வழங்கல்
புதுச்சேரி : இந்து அறநிலைத்துறை மூலம் முருங்கப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக ரூ. 15 லட்சம் நிதி வழங்கப்பட்டது.முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்காக, அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்க, இந்து அறநிலையத் துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்து அறநிலைத்துறை மூலம் ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை, தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலையில் கோவில் நிர்வாக அதிகாரி அமுதனிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் திருப்பணிக் குழு தலைவர் வாழுமுனி, திருப்பணிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.