மேலும் செய்திகள்
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
28-Jul-2025
புதுச்சேரி: பணி நிரந்தரம் மற்றும் 7வது ஊதியக்குழு அமல்படுத்தக்கோரி பி.ஆர்.டி.சி ஊழியர்கள் 3வது நாளாக நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலை போராட்டத்தை துவங்கினர். இதையடுத்து, நேற்று முன்தினம் 2ம் நாள் போராட்டத்தை தொடர்ந்த ஊழியர்களிடம் முதல்வர் ரங்கசாமி, பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஊழியர்கள் நேற்று 3வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கிடையே, போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், நாளை (1ம் தேதி) காலை பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, 4ம் தேதி மேலாண் இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக பி.ஆர்.டி.சி., பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
28-Jul-2025