உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

புதுச்சேரி : ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போராட்டமாக நேற்று காலை 10:00 மணிக்கு பி.ஆர்.டி.சி., பணிமனை முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.பொது செயலாளர் வேலய்யன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.போராட்டத்தின்போது பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மகளிர் ஒப்பந்த டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். தினக்கூலி, ஒப்பந்த டிரைவர், கண்டக்டரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள டி.ஏ., போனஸ் வழங்க வலியுறுத்தினர். வரும் 24ம் தேதி ஆர்.டி.ஓ., தலைமை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம், நவ., 5ம் தேதி தலைமை செயலகம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 12ம் தேதி புதுச்சேரி முழுதும் பிரசாரம், 18ம் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ