உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இருளர் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை விரைவில் முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் ராஜன்குளம் இருளர் குடியிருப்பு பகுதியில், பாட்கோ மூலம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதில், அப்பகுதி சாலையை ஆக்கிரமித்துள்ளவர்கள், புதிய சாலை அமைக்கும் பணிக்குஎதிர்ப்பு தெரிவித்தால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.இதையடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் மற்றும் கலெக்டர் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்து, சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, புதிய சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.அதன்படி, கடந்த வாரம் ஆக்கிரமிப்பு இடங்கள் சர்வே செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.இதற்கும், ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மீண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது.இதனால், கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்தமக்கள் உடனே சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை துவங்கி முடிக்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்டோர் காட்டேரிக்குப்பம்- சுத்துக்கேணி செல்லும் சாலையில் நேற்று காலை 10:30 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு, சாலை அமைக்கும் பணியினை துவங்கினர். இதனால், மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை