உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்களுக்குப் பதில் அவர்களது கணவர்கள்தான் செயல்பட்டனர் : உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன் வ

பெண்களுக்குப் பதில் அவர்களது கணவர்கள்தான் செயல்பட்டனர் : உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன் வ

புதுச்சேரி : 'உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்குப் பதில், அவர்களின் கணவர்கள்தான் செயல்பட்டனர்' என, உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன் பேசினார்.தலைமைச் செயலகத்தில், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை சார்பில், '1959 முதல் புதுச்சேரியின் கிராம வளர்ச்சிக்கு பஞ்சாயத்துகளின் பங்கு' என்ற கருத்தரங்கில் உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்ரமணியன் பேசியதாவது:அதிகாரிகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் தன்மையை, உள்ளாட்சி பிரதிநிதிகள் வளர்த்துக் கொள்ளவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு 23 அதிகாரங்கள் கொடுத்தோம். அவற்றைப் புரிந்து கொள்ளும் தன்மை பலருக்கு இல்லை. 'நான்' என்ற நிலைப்பாடு இருந்ததுதான், கிராம பஞ்சாயத்துகள் சரியான வளர்ச்சி பெறாததற்குக் காரணம். கிராமசபை கூட்டம் எதற்கு நடத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமலே சபையைக் கூட்டும் நிலை இருந்தது.கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், தங்கள் அதிகாரத்தைத் தெரிந்து கொள்ளாமல் செயல்படுவதுதான் பிரச்னை. கிராம சபையில் எதிரான கருத்துக்கள் தான் கூறப்படுகின்றன. வளர்ச்சிக்கான கருத்துக்கள் இல்லை. கிராம பஞ்சாயத்துகள் நிதியைத் தான் விரும்புகின்றன. சில கிராமப் பஞ்சாயத்துகளில் 1000 ரூபாய் கூட வருவாய் இருக்காது. அந்த கிராம பஞ்சாயத்தில் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் சொந்த கட்டடம், இந்த ஆண்டிலேயே ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளோம். சில கிராம பஞ்சாயத்து மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் தலைமைப் பொறுப்பில் உள்ள பெண்களுக்குப் பதில், அவர்களின் கணவர்களே சேர்மன்களாக செயல்படுகின்றனர். எவ்வளவு கேவலமான நிலை இது. பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தும் செயல்படாத நிலைதான் உள்ளது. இது போன்ற நிலை போக்கப்பட வேண்டும். இவ்வாறு பாலசுப்ரமணியன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி