மேலும் செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
24 minutes ago | 1
டில்லி பாதுகாப்புக்காக வருகிறது சுதர்சன சக்கரம் கவசம்
38 minutes ago | 1
புதுச்சேரி : புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு விழா நேற்று நடந்தது. தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு விழா நேற்று மாலை நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் யுவான் ஆம்புரோஸ், பகல் 12 மணிக்கு முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின், மாலை 5.30 மணிக்கு திண்டிவனம் நடுநிலைய இயக்குனர் அல்போன்ஸ் அடிகளார் ஆகியோர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். முன்னதாக நேற்று காலை திருப்பலிக்கு முன் மூன்று நாள் விழாவிற்கான கொடியேற்றப்பட்டு பகல் 11 மணிக்கு மிஷன் அச்சக மேலாளர் அருட்பணி மரிய ஜோசப் நற்கருணை ஆராதனை நடத்தினர்.இரவு 7 மணிக்கு பசிலிக்கா அதிபர் தாமஸ் அடிகள், அருட்பணி உதவியாளர் லூர்துசாமி, பொறிஞர் சார்லஸ் கோலன், வின்சென்ட்ராயர், நாதன், கிலோன் ஆகியோர் பேராயர் இல்லத்திலிருந்து போப்பாண்டவரின் இந்தியத் தூதர் சால்வாத்தோரே பெனாக்கியோவை பவனியாக அழைத்து வந்தனர். அப்போது பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. கோவில் வளாகத்தில் நுழைந்தவுடன் முறைப்படி அறிவிப்பதற்கான ஆவணத்தை லத்தீனில் வாசிக்க பேராயர் ஆங்கிலத்தில் வாசிக்க முறைப்படியான அறிவிப்பும், அர்ப்பணமும் நடந்தது.இதனையடுத்து அனைவரையும் தூயநீரால் புனிதப்படுத்தினர். பின் அமலோற்பவம் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வரவேற்பு விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விழா நினைவாக பசிலிக்கா பற்றிய சிறு வழிகாட்டுதல், நூலை இந்தியத் தூதர் வெளியிட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் பெற்றுக் கொண்டார். பசிலிக்கா பெயர்ப்பலகை, புதிய வெப்சைட் வெளியிடப்பட்டன. பேரவைத் துணைத் தலைவர் வின்சென்ட் ராயர் நன்றி கூறினார். இன்று (3ம் தேதி) இந்தியத் தபால்துறை உயர் செயலர் ராதிகா துரைசாமி சிறப்புத் தபால் உறையை வெளியிடுகிறார். நாளை (4ம் தேதி) மாலை 7.15 மணிக்கு புதுச்சேரி கவர்னர், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்படுகிறது. விழாவில் புதுச்சேரி கடலூர் மறைமாவட்ட பங்குத் தந்தைகள், நிர்வாகிகள், கிறிஸ்துவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
24 minutes ago | 1
38 minutes ago | 1