மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
30 minutes ago
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
2 hour(s) ago | 4
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
புதுச்சேரி : தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்தவிவாதம்:அன்பழகன்: புதுச்சேரி மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன...அமைச்சர் கல்யாணசுந்தரம்: தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிக்கேற்ப கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டசபையில் மசோதா கொண்டுவர மத்திய அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது பரிசீலனையில் உள்ளது.அன்பழகன்: இந்தக் கேள்வியை 10 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். குழு அமைக்கப்படும் என்ற பதிலே தொடர்ந்து அளிக்கப்படுகிறது. குழு அமைப்பதைத் தடுப்பது யார்... தமிழகம், கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. புதுச்சேரியில் ஏன் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது... கட்டணத்தை அடிக்கடி உயர்த்துவதால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதல்வர் ரங்கசாமி: பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் ஏன் சேர்க்கக் கூடாது... நல்ல கட்டடத்தில் அரசு பள்ளிகள் இயங்குகின்றன. நல்ல ஆசிரியர்கள் உள்ளனர். தனியார் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டுமா... ஒரே பள்ளியில் சேர வேண்டும் என அனைவரும் செல்வதால் அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். கல்வி கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்தை அரசு பரிசீலிக்கும். லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரம் என்ன, என்னன்ன பிரச்னைகள் உள்ளது என பாருங்கள். பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். கல்வி கட்டணம், மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது.முதல்வர் ரங்கசாமி: அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கின்றனர். முதலிடம் பிடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் அப்பா டாக்டரா, அம்மா தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறாரா என பார்த்து சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் சேரலாம்.லட்சுமிநாராயணன்: அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் முதல்வர் பேசுவதற்கு அவசியம் இல்லை.அன்பழகன்: கட்டணம் நிர்ணயம் தொடர்பாக சட்டம் கொண்டு வாருங்கள்.முதல்வர் ரங்கசாமி: இதுதொடர்பாக குழு அமைக்கப்படும்.
30 minutes ago
2 hour(s) ago | 4
4 hour(s) ago | 3