தவளக்குப்பம் என்.எஸ்.எஸ்., சார்பில் பொருளாதார கணக்கெடுப்புப் பணி
புதுச்சேரி : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் சதா நகர் பகுதியில் சமூகப் பொருளாதார கணக்கெடுப்புப்ம் பணி நடந்தது.திட்டப்பணியை கிராமத் தலைவர் ரவி துவக்கி வைத்தார். திட்ட அலுவலர்கள் லோகநாதன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று கிராமத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, மாதவருமானம், தொழில், சிறப்புத் தகுதி, ஊனமுற்றோரின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்தனர்.