மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
1 hour(s) ago | 2
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
புதுச்சேரி : 'குடிநீர் குழாய்களில் தண்ணீரில் இரும்பு துகள் கலந்து வருகிறது' என, புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., புகார் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: புரு÷ஷாத்தமன்: மணவெளி மற்றும் அரியாங்குப்பம் தொகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் இரும்பு தூள் கலந்து வருவது அரசுக்குத் தெரியுமா...முதல்வர் ரங்கசாமி: குடிநீரின் தரம் மத்திய தரக்கட்டுப்பாட்டு அளவிற்குள் உள்ளது. புரு÷ஷாத்தமன்: நல்லவாடு கிராமத்தில் குடி நீரில் இரும்பு தூள் கலந்து வருகிறது. இந்த தண்ணீரை குடித்தால் மக்கள் உயிரோடு இருப்பார்களா... (பழுப்பு நிறத்தில் பாட்டிலில் பிடித்து வந்திருந்த குடிநீரை சபையில் காண்பித்தார்) முதல்வர் ரங்கசாமி: குழாயில் இருக்கும் துரு தண்ணீரில் கலந்து வருகிறதா... தண்ணீரில் இரும்பு தாது கலந்துள்ளதா... நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். இதற்கு அரசு ஆவன செய்யும் என பட்ஜெட்டிலும் அறிவித்து இருந்தேன். புரு÷ஷாத்தமன்: போர்வெல்லை ஆழமாக போடச் சொல்லுங்கள்.முதல்வர் ரங்கசாமி: நடவடிக்கை எடுக்கப்படும்.
1 hour(s) ago | 2
4 hour(s) ago | 5
5 hour(s) ago | 18