உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.1.69 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 8 பேர் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளனர்.தவளக்குப்பம், இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், தொலை தொடர்பு துறை அதிகாரி போல் பேசினார். அதில், உங்களுடைய மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டு களை பிளாக் செய்துள்ளோம்.மேலும், சட்ட விரோத செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதில் இருந்து உங்களை விடுவிக்க அபராத தொகை செலுத்த வேண்டுமென, கூறியுள்ளார். இதைநம்பிய, மோகன் குமார் 1 லட்சத்து 69 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஆன்லைனில் குறைந்த விலையில் குளுக்கோஸ் பொருள் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, வெங்கடேைஷ தொடர்பு கொண்ட நபர், முன்பணம் செலுத்தும்படி கூறினார். அதைநம்பி, வெங்கடேஷ் 1 லட்சத்து 8 ஆயிரத்து 680 ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.மாகே பிராந்தியத்தை சேர்ந்த மஹ்மூத் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், குறைந்த வட்டியில் 7 லட்சம் வரை கடன் தருவதாகவும், அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்தும் படி கூறினார். இதைநம்பி மஹ்மூத் 1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார்.முதலியார்பேட்டை சபீனா 1 லட்சம், உருளையன்பேட்டை நேதாஜி நகர் ஜூலி ஆனந்தி 50 ஆயிரம், முத்துபிள்ளைப்பாளையம் நாகராஜ், 50 ஆயிரம், ராஜ்பவன் பகுதி விக்னேஷ் 7 ஆயிரத்து 100, பாகூர் சேலியமேடு ஸ்வேதா 2 ஆயிரத்து 786 என, மொத்தம் 8 பேர் 6 லட்சத்து 12 ஆயிரத்து 566 ரூபாயை ஏமாந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை