உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி பங்குச்சந்தையில் முதலீடு மோசடி ரூ.2.71 கோடியை இழந்த புதுவை நபர்

போலி பங்குச்சந்தையில் முதலீடு மோசடி ரூ.2.71 கோடியை இழந்த புதுவை நபர்

புதுச்சேரி:போலியாக உருவாக்கப்பட்ட பங்குச்சந்தையில் 2.71 கோடி ரூபாயை முதலீடு செய்த அரவிந்தர் ஆசிரம ஊழியர், பணத்தை இழந்தார். புதுச்சேரி, குருசுக்குப்பத்தை சேர்ந்த 72 வயது நபர், ஆசிரமத்தில் பணியாற்றுகிறார். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக, ஆன்லைனில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், முதலீடு செய்வதற்கான கம்ப்யூட்டர் இணைப்பு ஒன்றை அனுப்பினார். அந்த இணைப்பு உண்மையானது தானா என யோசிக்காமல், பல தவணைகளாக, 2.71 கோடி ரூபாயை, அந்த நபர் முதலீடு செய்தார். அதில், அவருக்கு பல கோடி ரூபாய் லாபம் வந்துள்ளதாக, போலியாக உருவாக்கப்பட்ட வங்கிக்கணக்கில் காட்டப்பட்டது. அந்த பணத்தை எடுக்க முயன்ற போது, முடியவில்லை. மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது குறித்து அவர் அளித்த புகாரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை அறியாமல் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சைபர் குற்றம் சம்பந்தமாக 1930, 0413-2276144, 9489205246 எண்களில் புகார் அளிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி