உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகர் செயலராக மோகன் நியமனம்

சபாநாயகர் செயலராக மோகன் நியமனம்

புதுச்சேரி : சபாநாயகரின் தனிச் செயலாளராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக சபாபதி கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டார். அவரின் தனிச் செயலாளராக, சட்டசபை தமிழ் பிரிவு நிருபர், மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் தனிச் செயலாளர் பதவியை, மோகன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார். சுற்றுலா மற்றும் நலத்துறை அமைச்சர் ராஜவேலுவின் தனிச் செயலாளர் கனகராஜ், உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தனிச் செயலாளர் அசோகன் ஆகியோரை தொடர்ந்து, கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் தனிச் செயலாளராக பாலசுப்ரமணியனை நியமனம் செய்து முறைப்படியான ஆணை நேற்று வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ