உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி

சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி

புதுச்சேரி : கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவிகள் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினர். என்.எஸ்.எஸ்., இணைப்பு அலுவலர் ராஜன் வழிகாட்டுதல் படி புதுச்சேரி பகுதி முழுவதும் உள்ள பள்ளிகளின் என்.எஸ்.எஸ்., சார்பில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, மாணவர்களால் சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவியர் குண்டுப்பாளையத்தில் திட்ட அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதல் படி சமுகப் பொருளாதார கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கவுன்சிலர் உலக வடிவேலு துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப் பாளர் பூபதி ஆலோசனை வழங்கினார். கணக்கெடுக்கும் பணி ஒரு வார காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை