உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ.,மருந்தகத்தில் கண் பரிசோதனை முகாம்

இ.எஸ்.ஐ.,மருந்தகத்தில் கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரி : தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில், முத்தியால்பேட்டையில் கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி மண்டல அலுவலகம் அனைத்து காப்பீட்டாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருக்கு கண் பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது.வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த முகாம், முத்தியால்பேட்டை இ.எஸ்.ஐ., மருந்தகத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக புதுச்சேரி மண்டல இயக்குனர் மீரான், முகாமைத் துவக்கி வைத்தார்.முகாமில் பங்கேற்றவர்களுக்கு, பார்வை சம்பந்தமான முதல் நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்து கொண்டவர்களில் தேவையான நபர்கள் அடுத்த கட்ட பரிசோதனைக்கு அழைக்கப் பட்டுள்ளனர்.இப் பரிசோதனையின் முடிவில், தேவைப்படுவோருக்கு மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளையும் புதுச்சேரி மண்டல தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் செய்துள்ளது.முகாமில், 250க்கும் மேற்பட்ட காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முதுநிலை மருத்துவ ஆணையர் கங்க பிரசாத், இ.எஸ்.ஐ., திட்ட இணை இயக்குனர் ஜி.எஸ்.நாயுடு, துணை இயக்குனர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை