மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
புதுச்சேரி : உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம், பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். ஆசிரியர் செந்தில்குமரன் வரவேற்றார். தலைமையாசிரியை மனோகராபாய், விரிவுரையாளர் சாம்பசிவம் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ராமலிங்கம் பாராட்டி பேசினார். மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆப்ரகாம் புளோரி, கிராமக் கல்விக்குழு துணைத் தலைவர் தசரதன், பட்டதாரி ஆசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழாசிரியர் கணபதி நன்றி கூறினார்.
3 hour(s) ago | 3
4 hour(s) ago | 16