உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

பட்ட மேற்படிப்பு மையத்தில் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 5 முதுகலை பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. கல்லூரி இயக்குனர் ஷைமா மேற்பார்வையில், காலை, மதியம் என இரு வேளைகளிலும் கவுன்சிலிங் நடக்கிறது. நேற்று காலை தமிழ், பிரெஞ்சு, வரலாறு ஆகிய முதுகலை பாடங்களுக்கும், மதியம் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கும் கவுன்சிலிங் நடந்தது.இன்று (25ம் தேதி) காலை பொருளாதாரம், கணினி அறிவியல், பிளான்ட் பயாலஜி பாடப் பிரிவுகளுக்கும், 29ம் தேதி காலை ஆங்கிலம், கணிதப் பாடத்திற்கும், மதியம் விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.மதிப்பெண் அடிப்படையில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 10 சதவிகிதமும், புதுச்சேரி மாணவ மாணவிகளுக்கு 90 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை