உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

புதுச்சேரி : உப்பளம் விளையாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கிடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நகரப் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான(1) விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றது. ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் நடந்த விளையாட்டு போட்டியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுவரை கிரிக்கெட், ஸ்கேட்டிங், கால்பந்து, பேட்மிட்டன் ஆகிய போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகள் உப்பளம் மைதானத்தில் நடந்து வருகின்றது. நேற்று காலை ஆண்களுக்கான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவிற்கான கையெறி பந்து போட்டி நடந்தது. இதில் 16 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதேபோல், பத்தாம் வகுப்பு அளவிலான பெண்களுக்கான கோ-கோ போட்டிகள் நடந்தது. இதில் நகரப் பகுதியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இதே போல் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் தவளக்குப்பம், மதகடிப்பட்டு ஆகிய இடங்களிலும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை